Mohamed Nizous
வயல யானை தாக்கினா விவசாயம்
வாயால ‘யானை’யைத் தாக்கினா அரசியல்
நிலத்தைக் கொத்திப் பச்சை வளர்த்தா விவசாயம்
பச்சையைக் கொத்தி நீலத்தை வளர்த்தா அரசியல்
மண் வெட்டி இருந்தா விவசாயம்
வெட்டியா மன்னன் இருந்தா அரசியல்
சுற்றி சுற்றி சூடு அடித்தா விவசாயம்
சூடு சொரண இன்றி சுற்றி சுற்றி வந்தா அரசியல்
ப’ரணில்’ இருந்து பாதுகாத்தா விவசாயம்
ப’ ரணில்’ இருந்து பாய்ந்தா அரசியல்
சாகுபடி செய்தா விவசாயம்
சாகும் படி செய்தா அரசியல்
கதிருக்காய் பாடுபட்டா விவசாயம்
கதிரைக்காய் பாடு பட்டா அரசியல்
முளைச்சா விவசாயம்
கலைச்சா அரசியல்
நெல்லு வந்தா விவசாயம்
கல்லு வந்தா அரசியல்
களை வந்தா அழிவது விவசாயம்
ரகளை வந்தால் வளர்வது அரசியல்
சாக்கில் மூட்டை கட்டினா விவசாயம்
‘ஷாக்’கில் மூட்டை முடிச்சை கட்டினா அரசியல்
சீட் போட்டு தண்ணி ஊத்தினா விவசாயம்
சீற்லயே தண்ணி ஊத்தினா அரசியல்
அக்றி கல்ச்சர் எண்டா விவசாயம்
அன்க்றி கல்ச்சர் எண்டா அரசியல்
The post விவசாயமும் அரசியலும் – கவிதை appeared first on Sri Lanka Muslim.