மகனே ஷைப் சுல்தான்
இன்று(20-12-2018)உனக்கு
இரண்டு வயது
இது பத்து மடங்காகும் போது
நான் உயிருடன் இருக்கும்
சாத்தியமில்லை
அப்போதும் என்னில் நீயிருப்பாய்.
இப்போது
அப்பா அப்பா என்று
ஆறத்தழுவி அரவணைப்பதைப் போன்று
அப்போது ஆறத்தழுவி அரவணைக்க
நானிருக்க மாட்டேன்.
மகனே
உனகென்று
ஒரு வாழ்க்கையுண்டு
அதனால்
உன்னை படைத்த
இறைவனை நினைத்தப் பார்
அவனுக்கு அடிபணிந்து
நடந்து கொள்
அவன் கட்டளைகளை
நிறைவெற்று
ஐந்து வேளையும்
அவனைத் தொழு.
உன்னைப் பெற்ற
தந்தையையும்,தாயையும்
உன் உயிராக்கு
உடன் பிறப்புக்களை
உன்னிதயத்திலாக்கு
உறவுகளை நேசி
உதவிகளைச் செய்
வாழும் வரை
நல்லதைக் கற்றுக் கொள்
கற்றதை கற்றுக் கொடு
உண்மையைப் பேசு
உயர்வாய்.
நல்ல பழக்க வழக்கங்களை
கடைப்பிடித்துக் கொள்
நல்வர்களை நேசி
கெட்டவர்களை நல்வழிப்படுத்து
அன்பை ஆயுதமாக்கு
அதன் மூலம் சாதித்துக் கொள்
ஏழைகளுக்கு உதவி செய்
எதிரிகளை நட்பால் வென்றுவிடு
எதற்கும் அஞ்சாதே
எதிர்த்துப் போராடு
நான் இல்லாத போதும்
என்னை நினைத்துக் கொள்.
இது அன்புடன்
உன் அப்பா
-பி.எம்.எம்.ஏ.காதர்-
நான் இல்லாத பொது
The post என் பேரனுக்கு இன்று இரண்டு வயது appeared first on Sri Lanka Muslim.