வேதனையிலும் சோதனையிலும்
பிள்ளைகளுக்காய் குடும்பத்திற்காய்
வியர்வை சிந்தி கரடு முரடான
மலைகளில் மழையென்றும்
வெயிலென்றும் பாராது துன்பப்படும்
மலையக வாழ் செல்வங்களான
நீங்களும் மனிதர்கள்தான்.
அட்டைக் கடிகளுக்கும்
குளவிக் கொத்துக்களுக்கும்
ஏன் விலங்குகளின்; கடிகளுக்கும்
பாம்பகளின் தீண்டதல்களுக்கும்
மத்தியில் கொழுந்திற்காய்
போராடும் உறவுகளே நீங்களும்
மனிதர்கள்தான்.
ஒரு நேரச் சோற்றுக்காய்
உடலை அர்ப்பனஞ் செய்யும்
துணிச்சல் மிக்க வீரர்களாய்
தேயிலைச் செடிகளுக்குள் வீறு
நடைபோட்டு கம்னிகளுக்காய்
கருவாடாகும் நீங்களும் மனிதர்களே.
ஈடுகொடுக்க முடியாத செலவைப் போக்க
வாய் பொத்தி, கைகட்டி நாளாந்தம்
550 ரூபாய்க்காய் உழைத்து
ஒரு வேலைச் சோற்றுக்கே போதாத
ஊதியத்தைப் பெற்று நாளாந்தம்
பட்டிணியாய் வாழ்ந்த நீங்களும்
மனிதர்களே.
இளமைகைளப் பாலாக்கி
இன்பங்களைத் தூக்கி எறிந்து
மேனிகள் கருத்தால் என்ன
சாதிகள் வெறுத்தால் என்ன என்று
நாட்டுக்காய் உழகை;கும்
மலையக உறவுகளே
நீங்களும் மனிதர்கள்தான்.
உள்ளத்தால் வெள்ளைக் காரர்கள்
தொழிலாளிகளாக நீங்கள் வீரர்கள்
தோட்ட நிருவாங்கள் பாவிகள்தான்
உங்களை கொத்தடிமைகளாக்கி
வருமாணம் ஈட்டும் கபடத் தனங்களை
ஒருபோதும் ஏற்க முடியாது என்று
வாதாடும் நீங்களும் மனிதர்கள்தான்.
விஷம்போல் ஏறும் விலைவாசியில்
வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தில்
1000 ரூபாய் என்ற பிடிவாதம்
அது பிடிமானமாகிட வேண்டும்.
எனப் போராடும் நீங்களும்
மனிதர்களே
தோட்டக் கம்பனிகளும்
தோட்ட நிருவாகங்களும்
உங்கள் கண்ணீரை கண்டு
கொள்ளாத் துரோகிகளாக
இருக்கiயில் அவர்கள் முன்
ஆயிரத்துக்காய் போராடும்
நீங்களும் மனிதர்களே.
1000 எனும் போராட்டம்
உங்கள் எதிர்காலத்து
முதலீடுகளாகி 1000 போல்
பலவாயிரமாக பெருக ஆசிகள்
பல கோடி உங்களுக்காய்
வந்து கொண்டிருப்பதும் நீங்களும்
மனிதர்கள்தான் என்பதற்காக.
(சத்தார் எம் ஜாவித்)
The post நீங்களும் மனிதர்கள்தான். appeared first on Sri Lanka Muslim.