Mohamed Nizous
இந்த நூற்றாண்டுக்கு
இன்று
பதினெட்டாம் பிறந்த நாள்.
தொழி நுட்பம்
தோளில் கை போட
கலாச்சாரம்
காலின் கீழ் மிதி பட
அரபுலகை
அடிக்கடி புகைத்தபடி
பதினெட்டு வயது
பருவப் பிறந்த நாளை
இந்த நூற்றாண்டு
இம்சையாய் கொண்டாடுகிறது.
வயிற்றில் இருக்கும் போதே
Y2K பிரச்சினை வர
வந்த பின்
நொந்து போனார் பலர்
ஒண்ணாம் வயதில்
ஒரு செப்டம்பர் 11ல்
பெரிய அண்ணனின் மீசையை
பிடித்து இழுக்க
அண்ண ஆவேசமாகி
அடித்த அடியில்
அரபுலகம்
அரைபட்டது
நாலு வயதில்
சுமாத்ராவில் தடுக்கி விழ
கையில் இருந்த
கடல் நீர் பாத்திரம்
கவிழ்ந்து கொட்ட
இலட்சக்கணக்கான மனிதங்கள்
இறையடி எய்தன
அதே வயசில…
பேஷ் புக் என்ற
பெரிய கரண்ட
பிடித்து இழுத்ததில்
அடித்த ஷொக்
இண்டைக்கு வரைக்கும்
எல்லா இயக்கத்திலும்
பொல்லாங்கு செய்யுது.
அதே வயசில
அடுத்த வீட்டுக்குப் போக என
செவ்வாய் கிரகத்துக்கு
செய்மதி போனாலும்
சொந்த வீட்டில
சோத்துக்கு வழியில்லாத
சோமாலியாக்கள் இருப்பத
புள்ள மறந்திடுச்சு
எல்லாம் தலை எழுத்து.
ஆறு வயசில
ஆற அமர யோசிச்சு
புளூட்டோ கூட்டாளிக்கு
புளியங் கொட்டையால எறிஞ்சு
நீ எங்க டீம்ல
நீட்டுக்கும் இருக்காதே என
சொல்லி விரட்டி
ஷோ காட்டியது
ஒம்பது வயசில
ஒசாமா அங்கிள
தேடிப் பிடிச்சு
திடீரெண்டு போட்டதை
நம்பல்ல இன்னும்
நாட்டில பல பேரு
இன்னும் இருக்கு
ஏராளம் சொல்ல.
கோரப் புலி
வேரோடு அழிந்தது.
வெள்ளை மாளிகைக்கு
வெண்ணை
அண்ண ஆனது.
மாட்டுக் கறிக் காவலன்
நாட்டுக்குத் தலைவனாகி
காந்தியின் மண்ணுக்கு
கடுந்தீ வைத்தான்.
இன்னும் ஏராளம்
எழுதலாம் ஆனாலும்
ஒண்ணுரெண்டு தகவல்களை
ஒப்பிட்டுப் பார்த்தாலே
தொழி நுட்பம்
தோளில் கை போட
கலாச்சாரம்
காலின் கீழ் மிதி பட
அரபுலகை
அடிக்கடி புகைத்தபடி
பதினெட்டு வயது
பருவப் பிறந்த நாளை
இந்த நூற்றாண்டு
இம்சையாய் கொண்டாடுகிறது
The post பதினெட்டாம் பிறந்தநாள் வரை (கவிதை) appeared first on Sri Lanka Muslim.