Mohamed Nizous
இண்டெக்ஸ் இலக்கமும்
எடுக்கின்ற பெறுபேறும்
பிறப்பதற்கு முன்பே
பிரிண்ட் ஆகி விட்டன
வெற்றி பெறுவதும்
முட்டித் தோற்பதும்
முற்று முழுதாக
முடிவாகி விட்டது
ஜீவன் பிரிய வேண்டிய
ஜி பி எஸ் லொகேஷனும்
ஜி எம் டி நேரமும்
ஏற்கனவே ஏட்டில்
எழுதப் பட்டு விட்டன.
இப்போது நடப்பது
எழுதப்பட்டவையே.
தப்பிப் போனதற்காய்
தவித்துத் துடிப்பதிலும்
எப்படி என் திறமை
என்று துள்ளுவதிலும்
அர்த்தமே இல்லை
ஆராய்ந்து பார்த்தால்…!
எழுதியதே நடந்தது.
இல்லை என்று சொன்னால்
இறைவனே இல்லை என்று
இறுதியில் கருத்து வரும்
நாளை நடப்பவற்றை
நாயன் அறிவானா?
இல்லை என்று சொன்னால்
இறை அறிவைத் தாழ்த்துகிறார்.
ஆம் என்று சொன்னால்
அதுதான் விதி.
விதி போட்டுத் தந்த
வீதியிலே நடக்கின்றோம்
எது நடந்தாலும்
இறைவனின் நாட்டமே.
The post விதி போட்ட வீதியில்… (கவிதை) appeared first on Sri Lanka Muslim.