Mohamed Nizous
எழும்பிப் பறக்குமுன்னே
இறகொடிந்த கிளிகள்
வாப்பா
வாங்கி தா என்று
வாய் மொழி பேச
வாய்புக் கிடைக்காத
வார்ப்புக்கள்
சோறு போடும்மாண்ணு
சொல்லக் கிடைக்காத
சோகத்தைச் சுமந்தவர்கள்
பெற்றவர்
இறந்து போனதால்
அல்லது
துறந்து போனதால்
நட்டாற்றில் விடப்பட்ட
கட்டு மரங்கள்
எதிர்காலத்தை
யார் சிதைத்தாலும்
இல்லை வதைத்தாலும்
இருட்டுக்குள் அழுவதைத் தவிர
இவர்களுக்கு
இல்லை வேறு வழி
மடத்தில் நடந்த
மடத்தனங்கள் பற்றி
மாறி மாறி எழுத
நாறிப் போவது
மடத்தின் பெயரும்
மெடத்தின் பெயரும் மட்டுமல்ல
இந்தப் பிஞ்சுகளின்
எதிர் காலமும்தான்.
வழக்கு
வெல்லலாம்
அல்லது
தள்ளலாம்
ஆனால்
இவர்களின்
எதிர் காலம்..?
இதற்கொரு முடிவு காணல்
எல்லோர்க்கும் கடமை
இவர்கள்
இங்கே வளர்ந்தார்கள்
என்ற
அடையாளங்கள்
அழிக்கப் பட வேண்டும்
புதிய இடம்
புது வாழ்க்கை
போதுமான பாதுகாப்பு
பொருத்தமான கல்வி
புகுத்தப் பட வேண்டும்
இன்னுமொரு மலர்
இதயமில்லாதவரால்
இன்னல் படாதிருக்க
யாவரும் சிந்திப்போம்
எழுதுவது இலகு
இலக்கு கடினம்
இறைவனுக்காக என்று
இறங்கி செயற்படுவோர்க்கு
எல்லாம் சாத்தியமே.
The post அனாதைச் சிறுவர் (கவிதை) appeared first on Sri Lanka Muslim.