Mohamed Nizous
கருவறை எழுதிய
கவிதை
‘ஒற்றைத் துளி’
உயிராய்
உடலாய்
உருமாறி மலர்ந்த
உலக அதிசயம்
அழுதல் என்ற
ஆயுதம் தாங்கி
முழுதாய் ஆளும்
முல்லைப் பூ.
‘சாணை’யில்
சாய்ந்த படி
ஆணையிட்டு
ஆணையடக்கும்
அதிகாரப் பேரரசு.
புன்னகை மொழியால்
புதுக் கவி எழுதி
அன்னையின் மனதில்
அதியுயர் விருதை
அடிக்கடி வாங்கும்
ஆஸ்தான கவிஞன்.
அப்பாவின் அலட்சியங்களும்
அம்மாவின் ஆதங்கங்களும்
அவர்களின் பந்தத்தை
அறுத்து விடாதிருக்க
ஆண்டவன் கட்டிய
அப்பாவிக் கயிறு
பிரிவுகளையும்
பிரச்சினைகளையும்
இந்தக்
குருவிகள்
குதூகலமாய் மாற்றும்
மழலை
மழை
மலை
மாலை
இறைவனின் படைப்பில்
இதயத்தை வருடி நிற்பவை.
The post மழலை (கவிதை) appeared first on Sri Lanka Muslim.