Mohamed Nizous
எம்புள்ள தங்கம்
இருபத்து ரெண்டு கரட்
தம்புள்ள ரோட் போல
தம்பி பாதை நேர் பாதை
இப்படி எண்ணித்தான்
எல்லோரும் இருக்கின்றார்
செப்படி வித்தைகளை
செய்கின்றார் பிள்ளைகள்
காசக் கொடுப்பதே
பாசமென்று நினைத்து
கேட்டதைக் கொடுக்கிறார்
கெட்டதையும் கொடுக்கிறார்
ஹனிபா றிங் டோனில்
ஹஜ் படம் வோல் பேப்பரில்
பணிவான என் மகன்யா
பாடுகிறார் பிள்ளை புகழ்
அப் லொக்கைத் திறந்து பார்
அப்பாவியா உன் பிள்ளை
கொப்பருக்கு படம் காட்டியது
அப்படியே விளங்கிப் போகும்
அளவில்லா சுதந்திரம்
ஆளைப் போட்டு விடும்
அழுதாலும் திரும்பி வராது
அணை கடந்து போன வெள்ளம்
பெற்ற பிள்ளைகள்
பிரிய நட்புக்களில்
புற்றில் பாம்பு போல்
கெட்டதுவும் இருக்கலாம்
எங்கே போகிறான்
யாருடன் சேர்கிறான்
தங்கம் மகன் எனினும்
தவறாது பார்த்தல் கடமை
நன்றாய் வாழும் பிள்ளைகளே
நாட்டில் மிக அதிகம்
என்றாலும் கண்காணிப்பு
இருக்கனும் எப்போதும்
மார்க்கத்தின் பக்கம்
மக்களை சாய்த்து விட்டால்
போக்கிரித் தனமில்லா
புள்ளைகளாய் அவை வளரும்
பக்கத்து வீடு
பற்றி எரியும் போதே
தக்க முறை நாடாவிட்டால்
தம்பி வீடும் எரிந்து போகும்
The post எம்புள்ள தங்கம் appeared first on Sri Lanka Muslim.