வாப்பா என்றழைக்க
இரு பிள்ளைச் செல்வங்கள்
பெரியப்பா என்றழைக்க
பதினொருவர் – இது கண்டு
ஆனந்த வெள்ளத்தில்
அள்ளுண்டு போகிறது – என்
ஆள் மனது.
ஆல் சூரி பூங்காவில்
இன்று அதிகாலை
மலர்ந்திருக்கும் புத்தம் புது
பெண் பூவை வாழ்த்தி வரவேற்கிறேன்
அல்ஹம்துலில்லாஹ்.
இந் நாளிகையில்
என் விழியோரம்
கண்நீர் துளிகள்
துள்ளி ஓடுகிறது
அதில் ஆனந்தமும்
அங்கலாய்பும் கலக்கிறது
சொர்க்கத்தில் மணம் பரப்பும்
மலர்கள் இரண்டின்
மனப்பதிவுகள் – என்
நெஞ்சத்தை கிழிக்கிறது
இந்நாளில்.
ஆனாலும் எஜமானின்
அழைப்புக்கு பதில் சொல்லவே
அவசரமாய் சென்றார்கள்
என் ரத்தத்தின் ரத்தங்கள்
நாளை
சுவர்க்கத்தில் இருந்து கொண்டு
பெரியப்பா என்றழைத்து
வரவேற்க காத்திருக்கும்
கதீஜா எனும் கற்கண்டே
தாபித் எனும் தங்கமே
உங்களை இப்புது உறவு
வந்துதித்த நன் நாளில்
கண்கள் தேடி கசிகிறது.
அளவற்ற அருளாளனே
நிகரற்ற அன்புடையோனே
கருனையாளனே! எம் எஜமானே!
முளந்தாளிட்டு சிரம் பணிந்து
கேட்கிறோம்
எம் மக்களுக்கு ஆரோக்கியமும்
உன் றஃமத்தும் மஃபிறத்தும்
கடலளவு கிடைப்பதற்கு.
இனி எல்லோரும் ஓதுவோம்
அல்ஹம்துலில்லாஹ்.
அபு உமைர் ஆல் சூரி
The post அல்ஹம்துலில்லாஹ் (கவிதை) appeared first on Sri Lanka Muslim.