Mohamed Nizous
டியூட்டி செய்யா மந்திரிக்கு
டியூட்டி ப்ரீ வாகனம்
வெற்று வயிறாய் உழைப்பவனுக்கு
வெற் வரி கட்டணம்
கோச்சி டிக்கட் எடுக்காட்டி
கொமிஷன் போட்டு விசாரணை
ஆட்சியாளன் சுருட்டினா
மூசசு விட ஆளில்ல
பைலை தூக்கும் பீயோனுக்கு
கைல இருக்கணும் டிகிரி
நாட்டத் தூக்கும் MPக்கு
நாலாம் வகுப்பும் தேவல்ல.
ஆரோக்ய ஆபிசரும்
அம்பத்தஞ்சில் வீட்டுக்கு
குடு குடு கிழவனும்
குந்திருக்கான் மந்திரியாய்
மூக்குப் பொடி வித்தவன்
மூணு மாசம் சிறையில
ஆட்களைக் கொன்றவன்
ஆட்சியில இருக்கிறான்
இந்த முரண்பாடு
எல்லார்க்கும் பொருந்தாது
எந்தக் காலத்தில்தான்
இவை மாறப் போகிறதோ?
The post முரண்பாடுகள் appeared first on Sri Lanka Muslim.