Mohamed Nizous
தலைக்கொரு சோற்றுப் பார்சல்
தனியாக கையில் காசு
அழைத்து வரும் ஆட்கள் வைத்து
அரங்கேறும் பொதுக் கூட்டம்
பிச்சைக் காரனுக்கு
பிரட் துண்டு கொடுத்ததையும்
முற்சந்தியில் பெரிதாய்க் கூறும்
முகஸ்துதிப் பொதுக் கூட்டம்
மேடை மேல் மேடை போட்டு
கூடுகின்ற மக்கள் நோக்கி
கூடாத பொய்யும் புரட்டும்
கூறுகின்ற பொதுக் கூட்டம்
இசையுடன் பாட்டுப் போட்டு
வசையுடன் பேச்சுப் பேசி
அசிங்கமாய் புறம் பேச
ஆங்காங்கே பொதுக் கூட்டம்
லட்சங்கள் செலவு செய்து
கட்சிக்கு மேடை போட்டு
கச்சேரி பாட்டு வைக்கும்
காட்சியுடன் பொதுக் கூட்டம்
கையை வீசி வீசி
பொய்யைப் பேசி பேசி
செய்ய முடியாத் திட்டங்களை
செய்வதாய்ச் சொல்லும் கூட்டம்
எல்லாக் கூட்டங்களுக்கும்
இவை பொருந்த மாட்டாது
நல்லவர் கூட்டங்களும்
நாட்டிலே நடக்கிறது
The post மாபெரும் பொதுக் குற்றம் appeared first on Sri Lanka Muslim.