Mohamed Nizous
ஒரே ஒரு வாக்கு
பலரின்
வட்டார வெற்றியை
வெட்டி வீழ்த்திவிடும்
ஒரே ஒரு அறிக்கை
சிலரின் கை
அரிக்கின்ற கை என்று
அறிவித்துக் கொடுத்து விடும்
ஒரே ஒரு விவாதம்
சிலரின்
வண்டவாளங்களை
தண்ட வாளத்தில் ஓட்டி விடும்
ஒரே ஒரு முரண்பாடு
சில
கூட்டமைப்புக்களை
கூத்தமைப்புக்களாக்கி விடும்
ஒரே ஒரு ஓடியோ
சிலரை
ஊரை விட்டு விட்டு
ஓடிப் போக வைத்து விடும்
ஒரே ஒரு பதிவு
சிலரைக்
கேணயனாய்க் காட்டி
மானத்தை ஓட்டி விடும்
ஒரே ஒரு சாபம்
சிலரின்
பில்லியனர் வாழ்க்கையை
பின்னி எடுத்து விடும்
ஒரே ஒரு சந்தேகம்
பலரின்
வாழ்க்கையைக் கிழித்து
வாசலில் வீசி விடும்
ஒரே ஒரு அவசரம்
சில
சாரதிகளின் காலத்தை
ஆறுதலாய்ப் படுக்க வைக்கும்
ஒரே ஒரு விடயம்
இந்த உலகத்தின்
எல்லா விடயங்களுக்கும்
இறுதிப் புள்ளி வைக்கும்
அது
இறப்பு
The post ஒரே ஒரு…. (கவிதை) appeared first on Sri Lanka Muslim.