Mohamed Nizous
நீதி சமம் என்று
‘போதி’க்கிறார்கள்
ஆனால்,
‘போதி’யின் கீழ்
சில
க’போதி’கள்
நீதிக்கு
பேதி கொடுக்கிறார்கள்
நீதியின்
பாதி -ஒரு
சாதியின் காலடியில்
சரிந்து கிடப்பதால்
மீதியுள்ள சாதி
பீதியில் வாழ்கிறார்கள்
நீதிக்கு
தீ வைக்கிறார்
நாதி இல்லா சமூகமும்
நடு நிலை இல்லா ஆட்சியும்
நாட்டில் இருப்பதால்
ஆதியிலேயே இதை
அடக்காது விட்டதனால்
வீதியில் குரைத்தவை -இப்போ
வீட்டுக் கதவு வரை வந்துவிட்டன.
காக்கி உடை
காட்’டான்’ அணியை
தூக்கி உள்ளே போடாமல்
ஆக்கிப் போட்டு
அன்னம் ஊட்டுகிறது
அடிக்க அடிக்க
ஆரும் கேட்கமாட்டார்கள் என்பதால்
கடிக்கிற நாயெல்லாம்
துடிக்கிறது
அடிக்கவும்
கடிக்கவும்
ஆட்சியிலுள்ள
பூச்சி புழுக்களுக்கு
காட்சி
கண்ணுக்கு விளங்காது.
அறிக்கை விட்டு மட்டும்
அரிக்கிற இடத்தில்
அப்பப்ப சொறிந்து விடும்.
இருமி இருமி
இருக்கும் போதே-இந்தக்
கிருமிகளை அடக்காது
கிளர்ந்தெளவிட்டால்-நாளை
ஒட்டு மொத்த உடலையும்
கெட்டு போகச் செய்து விடும்.
இரண்டு கோடி
இலங்கை ஜீவன்களில்
இரண்டொரு கேடிகள்
இன வாதம் கிளப்பி
நாட்டை அழித்து
நாசமாக்கப் பார்க்கின்றன
அந்த
முட்டாள்களை அடக்க
முடியாத ஆட்சி
முதுகெலும்பில்லா ஆட்சியே…!
The post நீதி சாதிமுன் சரிகிறது (கவிதை) appeared first on Sri Lanka Muslim.